நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக அமைச்சர்  அனுராக் தாக்கூர் தொடுத்த பொய் வழக்கு: நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்ததா விடுதலை 

புதுடெல்லி: 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை நியூஸ் கிளிக் நிறுவனம் தொடங்கியது. வெளிநாட்டில் இருந்து ஆதரவைப் பெற்று இந்த பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது என்று கூறி கடந்த ஆண்டு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழக்கு தொடுத்தார்  

அமெரிக்காவை சேர்ந்த நெவில்ராய் சிங்காம், நியூஸ் க்ளிக் இணையதளத்துக்கு நிதி உதவி செய்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து தொடர்ந்து, நியூஸ் கிளிக் செய்தி இணையதள நிறுவனமானது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில், சீனாவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடவே வெளிநாடுகளில் இருந்து இந்தப் பணம் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. 

எனவே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் டெல்லியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

இதையடுத்து இந்த விவகாரத்தில் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் நியூஸ் கிளிக் நிறுவன மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் உபா சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு இந்தியா கூட்டணி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக பிரபீர் புர்காயஸ்தா தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,

”உபா சட்டத்தின் கீழ் பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது. கைது தொடர்பான ஆவணங்களின் நகலை டெல்லி காவல்துறையினர் வழங்கவில்லை. 

இதனால், பிரபீர் புர்காயஸ்தாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்ததா நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டார்.

பாஜக அமைச்சர் அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடுத்த பொய் வழக்கு தொடுத்துள்ளார் என்பது நிரூபணமாகி உள்ளது. அதனால் பிரபீர் புர்காயஸ்தா விடுதலை செய்யப்பட்டார்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset