நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆம் ஆத்மி பெண் எம்பி தாக்கப்பட்டாரா?: பாஜகவின் சதி என குற்றச்சாட்டு

புது டெல்லி:

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் முதல்வரின் வீட்டிலேயே தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டுவது, முதல்வரை சிக்க வைப்பதற்காக பாஜகவினர் செய்த சதி என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி குற்றம்சாட்டினார்.

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என்று அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலானது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அதிஷி கூறுகையில், தில்லி முதல்வர்  கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்தே பாஜக கடும் கோபத்தில் உள்ளது.

பாஜக தீட்டிய அரசியல் சதித் திட்டத்தில் ஸ்வாதி மாலிவால் விழுந்துவிட்டார். முதல்வரை சந்திக்க நேரம் பெறாமல், ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு வந்துள்ளார்.  

அந்நேரத்தில் முதல்வர் அங்கு இல்லை என்பதால் சதித் திட்டத்தில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார்.

இதையடுத்து, முதல்வரின் தனி உதவியாளர் பிபவ் குமார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஸ்வாதி மாலிவாலுக்கு எதிராக தில்லி காவல் துறையில் பிபவ் குமார் புகார் அளித்துள்ளார்.
முதல்வர் கெஜ்ரிவாலை சிக்க வைப்பதற்காக பாஜகவினர் செய்த சதி இது என்றார் அதிஷி.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset