
செய்திகள் இந்தியா
கோவேக்ஸின் செலுத்திக் கொண்ட 30%பேருக்கு பாதிப்பு
புது டெல்லி:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை செலுத்திக்கொண்ட 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்பிரிங்கர் நேச்சர் என்ற ஆய்விதழில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022ம் ஆண்டு முதல் 2023 ஆகஸ்ட் வரை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.
வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50 சதவீதம் பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு சுவாசக் குழாய் தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன
கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவர்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அரிதாக ரத்தம் உறைதல், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் ஆகிய பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று மற்றொரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am