நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல் காந்தி

புது டெல்லி:  

அதானி போன்ற தொழிலதிபர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்தும் எனது கேள்விகளுக்கு பிரதமர்  மோடியால் ஒருபோதும் பதிலளிக்க முடியாது என்பதால் என்னுடன் பொது விவாதத்தில் பங்கேற்க அவர் மறுக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்தார்.

தில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  ராகுல் பேசுகையில், பிரதமர் மோடியுடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பொது விவாதம் நடத்த தயாராக உள்ளேன். ஆனால், அவர் வரமாட்டார்.

எனது முதல் கேள்வியே, தொழிலதிபர் அதானியுடன் அவருக்கான தொடர்பு குறித்ததுதான்.

அடுத்து, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இந்த இரண்டு கேள்விகளுடன், அந்த விவாதம் நிறைவுற்றுவிடும்.

கொரோனா பாதிப்பு நேரத்தில் தட்டுகளைத் தட்டி ஒலி எழுப்பவும், கைப்பேசிகளில் ஒளிரச்செய்யவும் பொது மக்களவை பிரதமர் கேட்டுக்கொண்டது ஏன்? என்ற கேள்வியையும் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

இந்த கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாது என்பதால், என்னுடனான பொது விவாதத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என்றார் ராகுல்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset