நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: சோனியா

ரேபரேலி:

மகன் ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர் ஒருபோதும் உங்களை ஏமாற்றமாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறினார்.

உத்தர பிரதேசம் ரேபரேலி மக்களவைத் தொகுதியின் 5 முறை எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.  ரேபரேலி தொகுதியை மகன் ராகுல் காந்திக்கு விட்டுக் கொடுத்தார்.

ராகுலுக்கு ஆதரவாக ரேபரேலியில் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி,
ரேபரேலி எம்.பி.யாக 20 ஆண்டுகள் பணியாற்ற மக்கள் வாய்ப்பளித்த எனது வாழ்வில் மிகப்பெரிய சொத்தாகும்.

ரேபரேலி மக்களிடம் எனது மகனை  ஒப்படைக்கிறேன். அவர் ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், ரேபரேலி மக்களும் எனக்கு கற்றுக் கொடுத்த அதே பாடங்களை ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் கற்றுத் தந்துள்ளேன்..

இந்திரா காந்தியின் இதயத்தில் ரேபரேலிக்கு எப்போதுமே சிறப்பிடம் இருந்தது. அவரது பணிகளை உன்னிப்பாக கவனித்துள்ளேன். அவர் ரேபரேலி மக்கள் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்தார் என்றார் சோனியா.

ராகுல் பேசுகையில், மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு நாட்டின் இளைஞர்களுக்கு விருப்பமில்லை. எனவே, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அவர் பிரதமராக இருக்க மாட்டார் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset