நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஈரானில் இருந்து தப்பி மீன்பிடிபடகில் கேரளம் வந்த 6 தமிழர்கள் கைது

கொச்சி: 

ஈரானில் இருந்து தப்பி கேரளத்தின் கோழிக்கோடு மாவட்ட கடற்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மீன்பிடி படகை பறிமுதல் செய்த இந்திய கடலோரக் காவல்படையினர். அதில், இருந்த 6 தமிழக மீனவர்களை கைது செய்தனர்.

இதுதொடர்பாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவிக்கையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேபூரின் மேற்கு கடற்கரையில் ஈரான் கொடியேற்றிய வெளிநாட்டு மீன்பிடி படகை இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்து கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

கடலோரக் காவல்படை மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், மீன்பிடி படகு ஈரான் நாட்டைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.

அந்தப் படகு ஈரானியரான சையத் சவுத் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது என்றும், ஈரான் கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த 6 பேரும் கடந்த மார்ச் மாதத்தில் அன்சாரியுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகவும் கூறியபடி ஊதியம் வழங்காததால் அவர்கள் படகை எடுத்து கொண்டு இந்தியாவுக்கு தப்பி வந்தனர் என்று தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset