நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பால்ட்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவம்: ஆறாவது சடலம் மீட்பு 

பால்ட்டிமோர்: 

பால்ட்டிமோரிலுள்ள ஃபிரான்சிஸ் ஸ்கோட் கீ பாலம் இடிந்து விழுந்ததில் மாண்ட ஆறாவது நபரின் சடலம் மே 7-ஆம் தேதியன்று ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.

இவ்வாண்டு மார்ச் 26-ஆம் தேதியன்று அந்தப் பாலத்தின் மீது கப்பல் ஒன்று மோதியதில் அஃது இடிந்து ஆற்றில் விழுந்தது.

அப்போது பாலத்தில் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் சிலர் ஆற்றில் விழுந்தனர்.

அவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மொத்தம் ஆறு பேர் மாண்டனர். 

அனைத்துச் சடலங்களையும் கண்டுபிடித்து மீட்க கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் ஆகின.

மாண்டவர்கள் அனைவரும் எல் சால்வடோர், குவாட்டமாலா, ஹோன்டுராஸ், மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மாண்ட ஆறு பேரும் மேரிலேண்ட் மக்களின் நினைவில் என்றென்றும் இருப்பர் என்று அம்மாநில ஆளுநர் வெஸ் மோர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset