
செய்திகள் உலகம்
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு பயங்கர ஆயுதங்களை அனுப்பிய கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு: ரெட்டை வேடம் போடும் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
சென்னை:
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு பயங்கர ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் கொண்டு சென்ற கப்பலை நிறுத்திக்கொள்ள ஸ்பெயின் அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க் கொடியுடன் சென்றுகொண்டிருக்கும் சரக்குக் கப்பலான டனிகா கப்பலானது ஹைஃபா துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மானுவெல், இதுதான் முதல்முறை, நாங்கள் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது, காரணம், இதுதான் முதல் முறை, ஒரு கப்பல், வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு இரேலுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்திக்கொள்ள அனுமதி கேட்பது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காஸாவில் போரை நிறுத்தவே இந்தியா முயன்றுவருவதாக, அண்மையில் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக, இந்தியாவிலிருந்து வெடிபொருள்கள் இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருப்பது, தற்போது கப்பலுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்துள்ளன.
இது குறித்து திரிணமூல் எம்.பி. சாகேத் கோகலே கூறியிருப்பதாவது, காஸா மீது வெடிகுண்டு மழைப் பொழிய இஸ்ரேலுக்கு வெடிபொருள்களுடன் சென்ற இந்திய சரக்குக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால், மோடி, காஸாவில் போரை நிறுத்த முயற்சிப்பதாக உலகத்தை பொய் சொல்லி நம்பவைக்கிறார். இதன் மூலம், மோடியின் பொய் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.
மோடியின் நேர்மை பூஜ்ஜியத்தில் உள்ளது. காஸாவில் போரை நிறுத்த முயற்சிப்பதாக அவர் பொய்யான, முட்டாள்தனமான பொய்யை கூறியிருப்புதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், இப்போது, பாலஸ்தீன மக்கள் மீது வெடிகுண்டுகளை வீச இஸ்ரேலுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு வெடிகுண்டுகளை அனுப்பியிருக்கிறது. தேர்தல் முடிவுகளால் பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவர் சொல்லும் பொய்கள் உலகம் முழுக்க வெளிப்பட்டுவிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேலுக்கு வெடிபொருள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலாக இருந்தாலும், ஸ்பெயின் துறைமுகம் வர அனுமதிகோரினால், இதுதான் எங்களது நிரந்தரக் கொள்கை. வெளிப்படையான காரணத்துக்காகவே, வெளியுறவு அமைச்சகம், இதுபோன்றதொரு கோரிக்கையை உடனடியாக மறுத்துவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்னும் கூடுதலாக ஆயுதங்கள் வேண்டாம், அங்கு மேலும் அமைதிதான் தேவை என்று பதிலளித்துள்ளார் ஜோஸ் மானுவெல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm
டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிர்க் படுகொலை
September 10, 2025, 5:04 pm
நேப்பாளத்தில் இருக்கும் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்
September 10, 2025, 4:57 pm