நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

BREAKING NEWS: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

துபாய்: 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர், அஜர்பைஜான் எல்லைக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் கடும் பனிமூட்டத்தினால் மலைப்பகுதியை கடக்கும்போது ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து ரைசி, வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

அதிபருக்கு வயது 63. இரண்டாவது முறையாக அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

"நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை" என்று அந்த அதிகாரி கூறினார்.

மோசமான வானிலையினால் மீட்புப் பணிகளை சிக்கலாக்குகிறது என்று மாநில செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரைசிக்காக பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. 

கடும் பனிப் பொழிவு உள்ளதால் மலைப் பகுதியில் மீட்புக் குழுக்கள் தேடி வருகின்றன.

ஈரான் அரசுத் தொலைக்காட்சி தனது வழக்கமான நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளது.

இன்னொருபுறம் இந்த விபத்துக்கு பின்னால் இஸ்ரேலின் சதிச் செயல் இருக்கலாம் என்கிற ரீதியில் ஒரு விவாதமும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset