நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலு திராம் காவல் நிலையத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம்; மலேசியா செல்லும் சிங்கப்பூரர்களுக்குக் கவனம் தேவை: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

சிங்கப்பூர்:

மலேசியாவின் ஜொகூர் பாரு உலு திராம் (Ulu Tiram) காவல் நிலையத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் இரு காவல் அதிகாரிகள் மாண்டனர். ஒருவர் காயமடைந்தார். மாண்ட அதிகாரிகளின் குடும்பத்துக்கு சிங்கப்பூர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சற்று முன்னர் அது குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டது.

வெளியுறவு அமைச்சு, கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம், ஜொகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் ஆகியவை ஜொகூர் பாரு நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாய் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் கவனமாக இருக்கும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.

தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்ய எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அது சொன்னது.

அவசரநிலையில் அரசாங்கம் தொடர்புகொள்ள ஏதுவாக, மலேசியா செல்லும் சிங்கப்பூரர்கள் அனைவரும் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset