நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

செமாரு எரிமலை 5 முறை வெடித்தது

ஜாவா:

கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு மலையில் நேற்று ஐந்து முறை வெடித்து சிதறியது.

இதனால் எரிமலை அதன் உச்சியில் 900 மீட்டர் உயரத்தில் சாம்பலை உமிழ்ந்தது என்று செமேரு  மலை கண்காணிப்பு அதிகாரி லிஸ்வாண்டோ கூறினார்.

ஆரம்பத்தில் வெள்ளையாக ஆரம்பித்த புகை சாம்பல் நிறத்திற்கு மாறியது.

பின் இந்த புகை தென்மேற்கு நோக்கி நகர்ந்ததாக அவர் கூறினார்.

செமேரு எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் அப்பகுதியில் கண்கானிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset