நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவுடனான ராணுவ உறவு வலுப்படுத்தப்படும்: புதின்

பெய்ஜிங்: 

சீனாவுடனான ராணுவ உறவு வலுப்படுத்தப்படும் என்று ரஷிய அதிபர் புதின் கூறினர்.

சீனாவில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அந்த நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரஷியாவின் அதிபராக விளாதிமீர் புதின் 5ஆவது முறையாகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதின் "இருநாடுகளின் பொருளாதார உறவும், ராணுவ உறவும் பலப்படுத்தப்படும் என்றார்.

ஷி ஜின்பிங் பேசுகையில், சீனா - ரஷியாவுக்கும் இடையிலான இந்த 75 ஆண்டுகால நல்லுறவு, பெரிய அண்டை நாடுகள் ஒன்றொயொன்று எவ்வாறு மதித்து நடந்துகொள்ள வேண்டும்; பரஸ்பர நலன்களுக்கான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்றார்.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு சீனா உதவக் கூடாது என்று அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் சீனாவுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset