நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

MDH, EVEREST மசாலாக்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளமும் தடை

காத்மாண்டு: 

சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளைத் தொடர்ந்து MDH, EVEREST மசாலாக்களுக்கு நேபாளமும் தடை விதித்துள்ளது.

தரம் குறைந்த காரணத்தால் இந்த மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்டிஹெச் நிறுவனத்தின் மெட்ராஸ் மசாலா (கறி) பொடி, சாம்பார் மசாலா பொடி, கறி பொடி, எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா ஆகிய 4 மசாலா பொடிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த 4 மசாலா பொருள்களை உடனடியாகத் திரும்பப்பெறவும் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களை நேபாள உணவு கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, எத்திலீன் ஆக்ஸைடு கலப்பு பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணவில்லை எனில், வரும் 2025ம் நிதியாண்டில் இந்திய மசாலா பொருள்களின் ஏற்றுமதி 40 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய மசாலா பொருள் வர்த்தகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset