நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் அதிகளவில் போலி வைத்தியர்கள்: அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

கொழும்பு:

இலங்கை முழுவதும் நிரம்பியுள்ள போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் தரப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சிலர் பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் மக்களுக்கு விற்பனை செய்வதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான போலி வைத்தியர்கள் தொடர்பில் 1907 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

- ருஷ்தி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset