நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகம் முழுவதும் உள்ள கோவிட்19 தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனெகா மீட்டுக் கொண்டது

லண்டன்:

பிரிட்டன் - சுவீடன் உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கோவிட்19 தடுப்பூசியை உலகளவில் திரும்பப் பெறுகிறது.

இதனை டெலிகிராப் நேற்று தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் தானாக முன்வந்து அந்த தடுப்பூசிகளையும் அதற்கான அங்கீகாரத்தையும்  திரும்பப் பெற்றுள்ளது.

இதன் மூலம் அந்த தடுப்பூசியை இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாது.

பலருக்கு பக்க விளைவுகளை உண்டுபண்ணிய அந்தத் தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் 5 ஆம் தேதி செய்யப்பட்டு மே 7 ஆம் தேதி அமலுக்கு வந்தது.

அடுத்த மாதம் வாக்ஸெவ்ரியா எனப்படும் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

அது இங்கிலாந்து உட்பட  பிற நாடுகளிலும் இதே பயன்பாடுகளுக்கு வரும் என தகவல் கூறுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset