நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

படுதோல்வி அடைந்தும் மனந்தளராத எரிக் டென் ஹாக்

லண்டன்:

மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி அடைந்தபோதிலும் தம்மால் மட்டுமே அதை மீண்டும் வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்று சிகரம் தொட வைக்க முடியும் என்று அவ்வணியின் தலைமை நிர்வாகி எரிக் டென் ஹாக் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டல் பேலஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த மென்செஸ்டர் யுனைடெட், லீக் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. 

அடுத்த பருவத்தில் ஐரோப்பிய நிலை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெற முடியாத அபாயத்தை அது எதிர்நோக்குகிறது.

தொடர்ந்து போராடுவேன். என்னால் முடிந்த அளவுக்கு குழுவைத் தயார்ப்படுத்தினேன். 

ஆனால் வெற்றி பெற அது போதவில்லை. இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். 

ஆனால் முனைப்புடன் செயல்பட்டு அடுத்த ஆட்டத்துக்கு மென்செஸ்டர் யுனைடெட்டின் ஆட்டக்காரர்களைத் தயார்ப்படுத்த இருக்கிறேன்  என்று மனந்தளராமல் தெரிவித்தார் எரிக் டென் ஹாக்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset