நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மஞ்சோங் தமிழ்ப்பள்ளிகளுக்கு  இடையிலான கால்பந்து போட்டி; விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க பேரா அரசு நிதி வழங்கும்: சிவநேசன்

மஞ்சோங்:

பேரா, மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்துப போட்டி டின்டிங்ஸ் இந்தியர் சங்க திடலில் சிறப்புடன் நடைபெற்றது.

டின்டிங்ஸ் இந்தியர் சங்கம் ( டி. ஐ. ஏ.), டி.ஐ.ஏ. கிக்கர்ஸ் இயக்கமும் இணைந்து இப் போட்டியை நடத்தியது.

இந்த மாவட்டத்தில்  உள்ள 16 தமிழ்ப்பள்ளிகளில் இருந்நு 17 குழுக்கள்  பங்கேற்றன.

இந்திய மாணவர்கள் கல்வித் துறையில் மட்டும் அல்ல விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்க ஊக்குவிக்க இந்தப் போட்டியை நடத்துவதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மகாலிங்கம் கோவிந்தசாமி கூறினார்.

டி.ஐ.ஏ. சங்கமும்  டி.ஐ.ஏ. கிக்கர்ஸ் சங்கமும் இந்த வட்டாரத்தில உள்ள  4 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு கால்பந்துப் பயிற்சி அளித்து வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டுத் துறையில் தொடர்ந்து ஊக்குவிக்க இப் போட்டியை நடத்துவதாக அவர்  குறிப்பிட்டார்.

மஞ்சோங் பகுதியைச் சுற்றியுள்ள தமிழ்ப்பள்ளிகள் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது முக்கிய நோக்கமாக டி.ஐ.ஏ.  கொண்டுள்ளதாக மகாலிங்கம் குறிப்பிட்டார்.

இந்த போட்டியை பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் தொடக்கி வைத்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்க மாநில அரசு நிதி வழங்கி வருகிறது.

அந்த வகையில்  இன்று மஞ்சோங்கில் நடத்தப்படும் இந்த கால்பந்துப் போட்டிற்கு ஆதரவு வழங்குவதுடன் மாநில நிலையில் பேரா இந்திய கால் பந்து சங்கம் நடத்தும் கால்பந்துப் போட்டிக்கு இந்த ஆண்டு 50 ஆயிரம் ரிங்கிட்டை மானியத்தை வழங்குவதாகவும் சிவநேசன் அறிவித்தார்.

மஞ்சோங்கில் பல ஆண்டுகாலமாக டி.ஐ.ஏ. சங்கம் சேவையாற்றி வருகிறது. 

அந்த சங்க கட்டட சீரமைப்பு 25 ஆயிரம் ரிங்கிட்டும், அதன் திடலை சீரமைக்க  25 ஆயிரம் நிதியும் வழங்குவதாக அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் கால்பந்து பயிற்றுனர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே  கூ ஹாமும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளி முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் ஆயர்தாவார் தமிழ்ப்ள்ளியும், மூன்றாவது, நான்காவது இடத்தில் முறையே புண்டுட், வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் வென்றது.

இதில் அதிக கோல்களை அடித்த பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த  மாணவன் ஜெ. சகதீஸுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset