நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

IPL 2024: சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி

பெங்களூரு: 

பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி.

நடப்பு ஐபிஎல் சீசனின் 68-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. 

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இந்த போட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இருந்தது.

வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவா்களுக்குள்ளே வென்றால் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.

போட்டியில் தோல்வியை தழுவினாலும் 201 ரன்களை கடந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இருந்தது. 

டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்ய பெங்களூரு தரப்பில் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ்-விராட் கோலி ஆகியோா் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா்.

மழையால் சிறிது நேரம் பாதிப்பு:

இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை தந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் பவா்பிளேயில் பெங்களூரு வெறும் 42 ரன்களை மட்டுமே சோ்த்தது.

விராட் கோலி-டுபிளெஸ்ஸிஸ் அபாரம்: அதிரடியாக ஆடிய கோலி 4 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 47 ரன்களையும், டு பிளெஸ்ஸிஸ் தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 39 பந்துகளில் 54 ரன்களையும் விளாசி அவுட்டானாா்கள்.

பின்னா் ஆட வந்த ரஜத் பட்டிதாரும் தன் பங்குக்கு 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 21 பந்துகளில் 41 ரன்களை விளாசி, சா்துல் பந்தில் டேரிலிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.

தினேஷ் காா்த்திக் 14, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்ப கேமரூன் கிரீன் தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் 38 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

பெங்களூரு 218/5: 
நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் பெங்களூரு அணி 218/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் சென்னை தரப்பில் சா்துல் தாகுா் 2-61 விக்கெட்டுகளை சாய்த்தாா். துஷாா் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சா்துல் தாகுா் ஆகியோா் ரன்களை வாரி வழங்கினா்.

இந்த சூழலில் இலக்கை விரட்டியது சிஎஸ்கே. முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹானே, 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா, 61 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ஷிவம் துபே மற்றும் மிட்செல் சான்ட்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் பேட் செய்ய தோனி வந்தார். கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 90 ரன்கள் தேவைப்பட்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சிஎஸ்கே 72 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. ஜடேஜா மற்றும் தோனியின் அனுபவம் கைகொடுக்கும் என சிஎஸ்கே அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கடைசி ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார் தோனி. 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது பந்தில் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்று அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷர்துல் தாக்குர் பேட் செய்ய வந்தார். மூன்றாவது பந்து டாட், அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார் ஷர்துல். கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா, ரன் எடுக்க தவறினார். அவர் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. இந்த ஆட்டத்தில் 27 ரன்களில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறி உள்ளது.

இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது ஆர்சிபி. அதற்கு முன்பு ஆடிய 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றிருந்தது. பல விமர்சனங்களை கடந்து ஆர்சிபி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

சிஎஸ்கே உடனான அந்த அணியின் கடைசி லீக் போட்டியில் நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நிலை இருந்தது. அதிலும் ஆர்சிபி வென்றது. மழை அச்சுறுத்தல் இருந்த நிலையில் அதையும் கடந்து வாகை சூடியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset