
செய்திகள் விளையாட்டு
சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் இளையோர் கிண்ணக் கால்பந்து போட்டி: 10 மாவட்ட குழுக்கள் பங்கேற்பு
கோலாலம்பூர்:
சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இளையோர் கிண்ணக் கால்பந்து போட்டி வரும் ஜூன் மாதம் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்து மாவட்ட குழுக்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன.
21 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த போட்டி சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஆதரவோடு நடைபெறுகிறது .
மலேசிய கால்பந்து சங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் இந்த போட்டியின் பூர்வாங்க ஆட்டங்கள் லீக் பாணியில் நடைபெறும்.
இரண்டு பிரிவுகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
எஸ்ஐஏ கிண்ணத்தை வெல்லும் குழுவுக்கு 5,000 ரிங்கிட், பரிசுகள் வழங்கப்படும்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 3,000 ரிங்கிட்டும் 3,4 ஆவது இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது.
சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் துணைத் தலைவர் நடராஜன், செயலாளர் சந்தனராஜூ தலைமையில் இந்த குலுக்கள் நடைபெற்றது.
எப்ஏஎம் துணைத் தலைவர் டத்தோ சிவசுந்தரம், சிலாங்கூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am