நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

IPL 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லியிடம் வீழ்ந்தது

டெல்லி:

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

222 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை.

ஜெய்ஷ்வால் 4 ரன்கள், பட்லர் 19 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டாக, அணி சரிவை சந்தித்தது.

கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், அவருக்கு பக்கபலமாக இருக்க ராஜஸ்தான் ராயல்ஸின் முன்னணி வீரர்கள் தவறினர்.

ரியான் பராக் 27 ரன்கள், ஷுபம் துபே 25 ரன்கள் போன்ற மிடில் விக்கெட் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன் குவிப்பை எடுக்க தவறியதோடு, விக்கெட்டையும் விரைவாக இழந்தனர்.

எனினும், சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்பின் தொடர்ச்சியான விக்கெட் சரிவு ஏற்பட்டது.

இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.

டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் கலீல் அஹமது, முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

டெல்லி கேபிடல்ஸ் அதிரடி ஆட்டம்:

டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல் - ஜேக் ஃப்ரேசர் இணை அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது.

அதிலும் குறிப்பாக ஜேக் ஃப்ரேசர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், அஸ்வின் வீசிய 5ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

அக்சர் படேல் 15 ரன்களில் கிளம்ப, அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் 65 ரன்களில் விக்கெட்டானார். ரிஷப் பந்த் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 156 ரன்களைச் சேர்த்திருந்தது.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - குல்பாடின் நையிப் இணைந்து அணியின் ஸ்கோரை ஏற்ற முயற்சித்தனர். 

ஆனால், குல்பாடின் 19 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 221 ரன்களை குவித்தது.
 
ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சாஹல், சந்தீப் சர்மா, போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset