
செய்திகள் கலைகள்
மணிரத்னம் இயக்கி வரும் THUG LIFE படத்தின் அப்டேட் வெளியானது: சிம்புவின் ப்ரோமோ வெளியாகிறதா ?
சென்னை:
உலகநாயகன் கமல்ஹாசன் – இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘தக் லைப்’ திரைப்படம். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கிடையே, துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சிம்பு இப்படத்தில் இணைந்தார்.
இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதனை உறுதிப்படுத்து விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில், நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிம்பு, வையாபுரி மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்த நிலையில், ‘தக் லைப்’ படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ மே 8 -ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இது நடிகர் சிம்புவின் இண்டிரோ வீடியோவாக இது இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 6:22 pm
நடிகை வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தார்
July 14, 2025, 1:09 pm
இந்திய திரையுலகின் பிரபல பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
July 12, 2025, 8:14 pm
வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்: ஷில்பா ஷெட்டி புகழாரம்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm