நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கைவிடப்படுகிறதா? படக்குழுவினர் விளக்கம்

சென்னை: 

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கைவிடப்படுகிறதா என்று கேள்வி சமூக ஊடகங்களில் வலுக்கிறது.விடாமுயற்சி கதை எழுதிய மகிழ் திருமேனி, அக்டோபர் மாதம் படம்பிடிப்பை அஜர்பைஜான் நாட்டில் தொடங்கினார்.

அதுவும் 3 மாதம் தொடர் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டனர். அதன் பின் வேலைகளும் வேகமாக நடைபெற்று வந்தன. இருந்தாலும் சில காரணங்களால் சின்ன சின்ன ப்ரேக் விடப்பட்டது.

விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும் இயக்குனர் மற்றும் லைக்கா நிறுவனத்தினரிடையே இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. இருந்தாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அஜர்பைஜான் நாட்டில் இயற்கை சீற்றம் சரியில்லை. இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன் படகுழுவினர் சென்னை திரும்பினர். அதேசமயம் படப்பிடிப்பு தளத்தில் படமாக்கப்பட்ட காட்சி ஒன்றையும் வெளியிட்டனர்.

அஜர்பைஜான் நாட்டில் இருந்து சென்னை திரும்பியப்பின் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை. இதற்கு இயக்குநர் – தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியதே காரணம் என சினிமா துறையில் பேசப்படுகிறது. 

இந்த ஒரு படத்திற்காக கடந்த 18 மாதங்களுக்கு மேல் அஜித் காத்திருக்கிறார். விடாமுயற்சி படத்தை முடிப்பதற்காக காத்திருந்த அஜித் தற்போது Good Bad Ugly படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி விட்டார்.

அந்தப் படம் வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. Good Bad Ugly படப்பிடிப்பு தொடங்குவதால் அஜித்தின் விடாமுயற்சி கைவிடப்படுகிறது. 

முதல் முறையாக அஜித்தின் ஒரு படம் தொடங்கி பாதியில் நிறுத்துகின்றனர் என்றெல்லாம் பேசப்படுகிறது.ஆனால் இந்த தகவலை படகுழுவினர் முற்றிலும் மறுக்கின்றனர். அத்துடன் விடாமுயற்சி பட்ஜெட் அதிகாவது உண்மைதான். ஆரம்பத்தில் முழு படத்திற்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட்டில் 80% இப்போதே முடிந்துவிட்டது. 60% படப்பிடிப்புதான் முடிவடைந்துள்ளது. அத்துடன் ஏற்கனவே படமாக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சிலவற்றை மீண்டும் படமாக்க வேண்டும் என்று இயக்குனர் கூறுகிறார்.

 இதனால் திட்டமிட்டதைவிட சுமார் 50% செலவு கூடுதலாகும். இருந்த போதிலும் படத்தை தொடங்க முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset