நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி

ஹைதராபாத்:

பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்திய தேர்தலில் பிரசாரத்தில் இடஒதுக்கீடு பிரச்சனை பெரும் பேசு பொருளாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிறரின் இடஒதுக்கீட்டை பிடிங்கி முஸ்லிம்களுக்கு வழங்கிவிடும் என்று பிரதமர் கூறி வருகிறார்.

இந்நிலையில் தெலங்கானாவில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இடஒதுக்கீடு முறைக்கு எதிரானது.

பாஜக தலைவர்களும் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை மறைமுகக் கொள்கையாகக் கொண்டவர்கள்தான்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு  வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி மத்தியில் அமைத்தால் 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பு மாற்றப்பட்டு, அதற்கு மேலும் இடஒதுக்கீடு அளிக்கப்படும். இது காங்கிரஸின் மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset