
செய்திகள் இந்தியா
மோடிக்கு ரூ.3 கோடி சொத்து
புது டெல்லி:
தனக்கு ரூ.3 கோடி சொத்துகள் உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவர் சமர்ப்பித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.3.02 கோடி சொத்துகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2014இல் ரூ.1.66 கோடி சொத்துகளும், 2019இல் ரூ.2.51 கோடியாகவும், 2024 ரூ.3.02 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
ரொக்கம் ரூ.52,920 உள்ளது. மோடியிடம் ரூ.2.67 லட்சத்தில் 4 தங்க மோதிரங்கள் உள்ளன.
2019இல் சேமிப்பு பத்திரங்களில் செய்திருந்த ரூ.7.61 லட்சம் முதலீட்டில் தற்போது ரூ.9.12 லட்சமாக அதிகரித்துள்ளது. தனக்கு சொந்தமாக கார், வீடு, நிலம், பங்குகள் எதுவும் இல்லை.
1978ம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு, குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்ததாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm