நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது. 

புதுடெல்லி:

இந்திய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதித் தடையை நீக்கியுள்ளது. அதனால் மலேசியாவுக்கு இந்திய வெங்காயம் இறக்குமதி செய்ய முடியும்.

குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ஒரு டன்னுக்கு 550 டாலராக அது நிர்ணயித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது..

அதனால் மலேசியா உட்படப் பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்தது.

பொதுத்தேர்தல், உள்ளூரில் வெங்காய விலையேற்றம் ஆகிய காரணங்களால் இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.

இப்போது இந்தியாவில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் வெங்காய விலை குறைந்துள்ளது. அதனால் ஒன்றிய அரசாங்கம் தடையை நீக்கியுள்ளது. 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset