நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்

இம்பால்:

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டாகிறது. ஆனால், கலவரம் அடங்கவில்லை.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூகத்தினர் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.

இந்தக் கலவரத்தில் ஏராளமான வீடுகள், வர்த்தக கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

காவல்துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

முகாம்களில் 50,000 பேர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர் வசிக்கும் கிராமங்கள் மீது மற்றொரு தரப்பினர் ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதங்கள் தொடர்கின்றன.

இதுவரையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில், அக்கறையற்ற மோடி அரசும் திறமையற்ற மாநில பாஜக அரசும் இணைந்து, மணிப்பூரில் மனிதநேயத்தை அழித்துவிட்டன; மாநிலத்தை இரண்டாக பிளவுபடுத்திவிட்டன.

பிரதமர் மோடி, இம்மாநிலத்தில் இன்னும் கால்வைக்கவில்லை. இது, அவரது நிர்வாக திறமையின்மை மற்றும் முழு அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  குற்றம்சாட்டினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset