
செய்திகள் இந்தியா
வரிசையில் நிற்காமல் சென்ற எம்எல்ஏவை தட்டிக் கேட்ட வாக்காளருக்கு அடி
தெனாலி:
ஆந்திர மாநிலத்தில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கச் சென்ற ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவை தட்டிக் கேட்ட நபரை, எம்எல்ஏவும் அவரின் ஆதரவாளர்களும் அடித்து உதைத்தனர். பதிலுக்கு அந்த வாக்காளரும் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.சிவகுமார் வாக்களிக்கச் சென்றார். நீண்டவரிசையில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தபோது எம்எல்ஏ சிவகுமார் நேரடியாக வாக்குச் சாவடிக்கு சென்றார்.
அப்போது, வரிசையில் காத்திருந்த வாக்காளர் ஒருவர் அவரை தட்டிக் கேட்டார். இதனால், ஆந்திரமடைந்த எம்எல்ஏ, வாக்காளரின் கன்னத்தில் அறைந்தார்.
அவரும் எம்எல்ஏவை திருப்பி அறைந்தார். வாக்காளரை சூழ்ந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அவரை அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் விடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am