நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து

ரேபரேலி:

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு ரூ.20 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு ரூ.3.81 கோடி மதிப்பிலான பங்குகள், வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சம், ரூ.15.21 லட்சம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்கள் உள்பட மொத்தம் ரூ.9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

அதேபோல், ராகுலுக்கு நடப்பு சந்தை மதிப்பில் ரூ.11.15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. இதில் ரூ.2.10 கோடி மதிப்பிலானவை பரம்பரை வழிவந்த சொத்துகள் ஆகும்.

ராகுலிடம் ரூ. 55,000 கையிருப்பு ரொக்கம் உள்ளது. அவருக்கு ரூ.49.79 லட்சம் கடன் உள்ளது.

கடந்த 2022 - 23 நிதியாண்டில், ராகுலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.1.02 கோடி என்று வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset