நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் தடை

புது டெல்லி:

உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மீது ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாராணசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

மேலும், கோயிலை இடித்துதான் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வாராணசி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதியை முகலாய மன்னர் ஒளரங்கசீப் கட்டியதாகவும், அந்த மசூதி உள்ள நிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் கூறி அங்குள்ள விரைவு உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரித்த அந்த நீதிமன்றம் கோயிலும் மசூதியும் உள்ள வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் உத்தர பிரதேச சன்னி வக்ஃபு வாரியம், வாராணசியைச் சேர்ந்த அஞ்சுமன் இன்தஸாமியா மசூதி குழுவின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் பாட்டியா வியாழக்கிழமை அறிவித்துள்ள உத்தரவில், "இந்த வழக்கில் அனைவரின் வாதங்களைக் கேட்ட பின்பு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.  ஆனால், தொல்லியல் துறை சோதனை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கீழ் நீதிமன்றம் விசாரித்து உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது. உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்திருக்க வேண்டும். வாராணசி விரைவு உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. கோயிலை இடித்துதான் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

உத்தர பிரதேச சன்னி வக்ஃபு வாரியம், அஞ்சுமன் இன்தஸாமியா மசூதி ஆகியவற்றின் சார்பில் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த  விசாரணையை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset