
செய்திகள் மலேசியா
தமிழ் மலர் நாளிதழ் ஏற்பாட்டில் "பதில் சொல்லுங்கள் பறந்து செல்லுங்கள்" புதிர் போட்டி
கோலாலம்பூர்:
தமிழ் மலர் நாளிதழ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான "பதில் சொல்லுங்கள் பறந்து செல்லுங்கள் " என்ற தலைப்பில் புதிர் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் இப்போட்டி வருகின்ற மே 5-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மலரில் வெளிவரும் புதிர் கேள்விகளுக்குப் பதிலளித்து பரிசுகளை வெல்லலாம்.
இப்புதிர் போட்டியில் முதல் பரிசு வெற்றி பெரும் மாணவருக்குச் சென்னை சென்று வர 3 பேருக்கான விமான டிக்கெட்கள் வழங்கப்படும். இரண்டாம் நிலை வெற்றியாளருக்க இந்தோனேசியா, பாலிக்குச் சென்று வர 3 பேருக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் நிலையில் மூன்றாம் நிலை வெற்றியாளருக்குத் தாய்லாந்து, புக்கேட்டுக்குச் சென்று வர 3 பேருக்கு வர விமான டிக்கெட்கள் வழங்கப்படும்.
மேலும், நான்கு முதல் ஆறாம் நிலையில் வெற்றி பெரும் வெற்றியாளர்களுக்கு லேகோலண்ட் ஜொகூர் பாருக்குச் சென்று வர 3 பேருக்கான நுழைவு டிக்கெட் வழங்கப்படும். ஏழு முதல் பத்தாம் நிலை வெற்றியாளர்களுக்கு லோஸ்ட் வோர்ல்டுக்குச் சென்று வர 3 பேருக்கான நுழைவு டிக்கெட் வழங்கப்படும்.
பதினொன்று முதல் 40 வரையிலான வெற்றியாளருக்குத் தலா 100 ரிங்கிட் வழங்கப்படும்.
இப்போட்டியில் 12 வயதுக்குக் கீழுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியாது.
தமிழ் மலர் நாளிதழில் வரும் அசல் பாரத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் கையெழுத்துடன் பள்ளியின் முத்திரையும் இருப்பது கட்டாயமாகும்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு செயல்பாடுகளை வெளியிடுவதை, தமிழ் மலர் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவித்து அதை வெளிக்கொணருவது, அவர்களுக்கான புதிர் போட்டி நடத்தி பரிசுகளைத் தந்து ஊக்குவிப்பது உட்பட பல்வேறு நலன்களை மையப்படுத்தி தமிழ் மலர் இந்தப் போட்டியை முன்னெடுத்து வருகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 2:05 pm
காணாமல் போனதாக நம்பப்படும் 6 பேர் ஆற்றில் மூழ்கிய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்
July 7, 2025, 2:03 pm
நீதிபதி நியமனங்கள் விவகாரம்; நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு மறைக்க எதுவும் இல்லை: ரபிசி
July 7, 2025, 12:36 pm
உலக வர்த்தக அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்தங்களுக்கு மலேசியா ஆதரவு: பிரதமர் அன்வார்
July 7, 2025, 10:54 am
காசாவில் மனிதாபிமான குற்றங்கள்; உலக நாடுகள் மௌனமாக இருக்கக்கூடாது: பிரதமர் அன்வார்
July 7, 2025, 10:16 am