செய்திகள் மலேசியா
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
உலு சிலாங்கூர்:
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
இம்மருத்துவ முகாம் இங்குள்ள மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று நம்பிக்கைக் கூட்டணியின் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
மக்களிடையே உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேன்டும் என பல நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.
எஸ்பி கேர் மருத்துவ குழுமம் இம் முகாமை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அவ்வகையில் இந்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் வரும் மே 5ஆம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை கோல குபு பாரு கிங் மிங் சீனப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலவச மருத்துவ சோதனை, பெகா பி40 சோதனை, கண், புற்றுநோய் சோதனைகள், ரத்த தான முகாம், மனநல பாதிப்பு சோதனைகள், இனிப்பு நீர் ஆகியவை இம்முகாமில் அடங்கும்.
முதலில் வரும் 300 பேருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். அதே வேளையில் அதிர்ஷ்ட குலுக்கலும் நடத்தப்படும்.
உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பயனாக இருக்கும் இம் மருத்துவ முகாமில் சுற்றுவட்டார மக்கள் திரளாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மேல்விவரங்களுக்கு spcaregroup எனும் சமூக வலைத் தளங்களை மக்கள் வலம் வரலாம் என்று டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 3, 2026, 2:26 pm
பள்ளி பேருந்து ஓட்டுநர்களின் மூன்று கோரிக்கைகளை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வர வேண்டும்: ராமதாஸ்
January 3, 2026, 2:24 pm
ரமலான் சந்தைக்கான அனுமதிகளைப் பெற முகவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: பிரதமர்
January 3, 2026, 2:23 pm
2026ஆம் ஆண்டுக்கான பள்ளி சீருடையில் மாற்றம் இல்லை: கல்வி இயக்குநர்
January 3, 2026, 7:16 am
அதிகாலை சோதனையில் சிக்கிய காதல் ஜோடி: யாபா போதைப்பொருள் பறிமுதல்
January 2, 2026, 10:15 pm
தனக்கு மிரட்டல்கள் வந்ததை கிளந்தான் போலிஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்
January 2, 2026, 10:12 pm
தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
January 2, 2026, 10:11 pm
கம்போங் பாரு கலவரம்: போலிஸ் தலைவரை காயப்படுத்திய குற்றத்தை 16 வயது சிறுவன் ஒப்புக் கொண்டான்
January 2, 2026, 10:08 pm
