நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்

கோல குபு பாரு:

நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் இதனை தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கலின் போது  தேசிய முன்னணி தலைவரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியின் முன்னிலையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, வேட்பாளரின் பிரச்சாரத் தொடருக்கு உதவும் வகையில்  அம்னோ மகளிர் பிரிவின் தேர்தல் கேந்திரங்களும் திரட்டப்பட்டுள்ளன.

ஒற்றுமை அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இன்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி ஆதரவு அளிக்க வந்திருந்தார்.

இதன் மூலம் வரும் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறும் என அந்தோனி லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset