நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆஸ்திரேலியா செல்ல மொஹைதீனுக்குக் கடப்பிதழைத் தற்காலிகமாக வழங்க நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர்: 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது குடும்ப உறுப்பினரைப் பார்க்க ஆஸ்திரேலியா செல்வதற்காகக் கடப்பிதழைத் தற்காலிகமாகக் பெற முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

மொஹைதின் தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தெஹ் போ தேய்க்கின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து நீதிபதி அஸுரா அல்வி இந்த முடிவை அறிவித்தார். 

இதற்கு அரசு துணை வழக்கறிஞர் நோ அஸ்மா அஹம்மத் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மார்ச் 2020-ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 2021-ஆம் தேதிக்கும் இடையில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹைதினின் கடப்பிதழ் பயன்பாட்டை நீதிமன்றம் முடக்கியது.  

எட்டாவது பிரதமராக பதவியேற்றபோது, மொஹைதின் ​​புகாரி ஈக்விட்டி எஸ்டிஎன் பிஎச்டி, நெப்டூரிஸ் எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் மாம்ஃபோர் எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் டத்தோ அஸ்மான் யூசாஃப் ஆகிய மூன்று நிறுவனங்களிடமிருந்து 232.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சமாக பெறுவதற்கு தனது பதவியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

முன்னாள் பிரதமர் 200 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பணம் பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset