நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான்கு மோனோ ரயில் நிலையங்கள் பழுதுபார்க்கும் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டன: ரேபிட் கேஎல்

கோலாலம்பூர்: 

மரம் விழுந்ததால் புக்கிட் நானாஸ், ராஜா சூலன், புக்கிட் பிந்தாங், இம்பி ஆகிய நான்கு மோனோ ரயில் நிலையங்கள் பழுதுபார்க்கும் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்படும் என்று ரேபிட் கேஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் பயணிகள் அந்தந்த இடங்களுக்கு தங்கள் பயணத்தைத் தொடர மாற்றுவழிகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

தொழிலாளர்கள் பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும். அதனால் நான்கு மோனோரயில் நிலையங்கள் பொதுமக்களுக்குப் பயன்பாட்டிற்கு தற்காலிகமாக மூடப்பட்டன என்றும் ரேபிட் கேஎல் நிறுவனம் தெரிவித்துள்ளனர். 

பயணிகள் இலவசமாக சேவையில் இருக்கும் ரேபிட் ஷட்டில் பஸ் மூலம் தங்கள் பயணத்தைத் தொடரலாம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் இடங்களை அடைய மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு ரேபிட் கேஎல் வலியுறுத்தியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset