நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி அரசியல் ஒத்துழைப்பு தொடர்ந்தால் ம.இ.கா, ம.சீ.ச படுதோல்வி அடையும்: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து 

கோலாலம்பூர்: 

அடுத்த 16ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி அரசியல் ஒத்துழைப்பு தொடர்ந்தால் அது தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளாக உள்ள ம.இ.கா, ம.சீ.ச கட்சிகளைத் தேர்தலில் படுதோல்வி அடைய வழிவகுக்கும். 

நடப்பில் வெற்றிப்பெற்ற தொகுதிகளை வெற்றிப்பெற்ற கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டால் இவ்விரு கட்சிகளும் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துங்கு மொஹார் துங்கு மொக்தார் கூறினார் 

இரு கட்சிகளின் பாரம்பரிய தொகுதிகளை DAP கட்சி கொண்டிருக்கிறது. இதனால் அம்னோ மட்டுமே மலாய்க்காரர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப்பெற இயலும் என்று சொல்லப்படுகிறது. 

தேர்தல் தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் அம்னோவிற்கு எந்தவொரு பாதகமும் இல்லை. இருப்பினும், ம.இ.கா, ம.சீ.ச ஆகிய கட்சிகளுக்குப் பாரம்பரிய இடங்கள் கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாகும். 

ம.இ.கா, ம.சீ.ச கட்சிகளின் தொகுதிகளை நம்பிக்கை கூட்டணியில் உள்ள DAP கட்சி பறித்துக்கொள்ளும் பட்சத்தில் 16ஆவது பொதுத்தேர்தலில் இரு கட்சிகளும் மிகப்பெரிய பின்னடைவைத் தேசிய அரசியலில் சந்திப்பார்கள் என்று IHLAM CENTRE தலைமை அதிகாரி ஹிசொமுடின் பாக்கர் குறிப்பிட்டார். 

கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெறும் 30 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே வென்றது. இது தேசிய முன்னணியின் மிக மோசமான அடைவுநிலையாக பார்க்கப்படுகிறது. நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளான உள்ள ம.இ.கா, ம.சீ.ச விற்கு எந்தவொரு அரசாங்க பதவிகளும் வழங்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset