நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜேடிதி ஆட்டக்காரர் ஷஃபிக் ரஹீம் கார் உடைக்கப்பட்டது

ஜொகூர்பாரு:

ஜேடிதி கால்பந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர் ஷஃபிக் ரஹீமின் காரை அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இங்குள்ள ஜாலான் ஸ்ரீ கெலத்தில் நேற்று இரவு நிகழ்ந்தது.

இரவு 10.05 மணியளவில் ஹோண்டா சிட்டி காரை ஜேடிதியின் ஸ்ரீ கெலாம் பயிற்சி மையத்திலிருந்து லிடோ கடற்கரை நோக்கி ஓட்டிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.

அடையாளம் தெரியாத இருவர்  மோட்டார் சைக்கிள் மூலம் அவரின் காரை நோக்கி பின் தொடர்ந்து வந்தனர்.

மேலும் காரின் கண்ணாடியின் பின்புறத்தில் தட்டுவதற்கு முன்பு அதில் ஒருவர் சுத்தியலை வெளியே எடுத்தார்.

உடனே அவரது காரை அவர்கள் உடைத்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து விரைந்து சென்று விட்டனர்.

லார்கின் போலீஸ் தலைமையகத்தில் அளித்த புகாரில் ஷஃபிக் ரஹீம் இவ்வாறு கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset