நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50 வயதுக்கு மேற்பட்ட மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டும்: ஸலிஹா முஸ்தாஃபா 

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மாநாகர மன்றம் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பழைய மரங்களைப் பாதுகாப்பதைக் கண்காணிப்பதற்கான வழிகாட்டுதல்களை மீண்டும் நிறுவும் என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஸலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார். 

நேற்று பிற்பகல் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் மரம் விழுந்து ஒருவரின் உயிரைப் பறித்தது.

இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்ததாகவும், 17 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது தலைநகரைச் சுற்றி 50 முதல் 80 ஆண்டுகள் பழமையான பல மரங்களை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அடையாளம் கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

தலைநகரைச் சுற்றியுள்ள சாலையைப் பயன்படுத்துவோரின் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 

தற்போதைய நிச்சயமற்ற வானிலை நிலைமைகளால் பழைய மரங்களும் விழ நேரத்திற்காக காத்திருக்கின்றன.

இந்தப் பழைய மரங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படுவதை உறுதிசெய்ய எடுக்க வேண்டிய வழிகாட்டுதல்களைப் பார்க்க வேண்டும்.

எத்தனை பழமையான மரங்கள் உள்ளன என்பது குறித்த தரவு தற்போது கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் எத்தனை பழைய மரங்கள் உள்ளன என்பதைக் கண்டறிய கண்காணிப்பு செய்யப்படும் என்று அவர் சம்பவம் நடந்த இடத்தில் சந்தித்த போது கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், கோலாலம்பூரில் உள்ள அனைத்து மரங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுகின்றன.

நேற்று விழுந்த மரம், 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரம். இது தனியார் துறையின் கண்காணிப்பில் உள்ளது என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்து கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset