நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி விவகாரம்; காவல் துறையுடன் ஒத்துழைக்கத் தயார்: சதீஸ் முனியாண்டி

கோலாலம்பூர்: 

ஒருமைப்பாட்டு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வரி செலுத்தவில்லை என்று தாம் முன்வைத்த கருத்துக்குக் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் காத்திருப்பதாக உரிமை அமைப்பின் தலைமைச் செயலாளர் சதீஸ் முனியாண்டி கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி போலீஸ் புகார் செய்துள்ள நிலையில் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயார் என அவர் கூறினார்.

முன்னதாகச் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு காணொலியில் தமக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாகச் சரஸ்வதி கந்தசாமி குற்றம் சாட்டியிருந்தார்

அந்த விடீயோவை தாம் பகிரவில்லை எனக் கூறிய சதீஸ், இரண்டு செய்தி அறிக்கையை வழங்கியிருந்ததாகவும், அதில் ஒன்றில் சரஸ்வதி கந்தசாமியின் பெயரை குறிப்பிட்டதாகவும் கூறினார்.
குறிப்பாக அந்தச் செய்தியில் துணையமைச்சர் நியமனம் தொடர்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் பொறுப்பு எனச் சதீஸ் கூறியிருந்தார்.

அதோடு உள்நாட்டு வருவாய் வாரியத்தால் (ஐஆர்பி) கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒருவரை செனட்டராகவோ அல்லது துணை அமைச்சராகவோ நியமிக்க முடியுமா என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறியிருந்தார்.

துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சுமார் 190,000 மலேசிய ரிங்கிட்டை வருமான வரியாகச் செலுத்த வேண்டுமெனப் போஸ்டர் வாட்சாப்பில் பரவியது. இது தொடர்பா அவர் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

தமது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

-தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset