நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மாட்ரிட் பொது டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட்:

களிமண் தரை போட்டியான மாட்ரிட் பொது சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் செவ்சென்கோவைத் தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் தியாகோ செய்போத் வில்டுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

இதன் பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸ்அரினா சபலென்கா 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டா லினெட்டை வீழ்த்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset