நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்குப் பயங்கரவாதிகள் மிரட்டல்

போர்ட் ஆப் ஸ்பெயின்: 

20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ளது. 

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்குப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் மன்றம் ஐசிசி தெரிவித்துள்ளது. 

வடக்கு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset