நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ராசா இளையோர் கால்பந்து கிளப்பின் பெனால்டி கிக் போட்டி: ஹன்னா இயோ பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்

உலுசிலாங்கூர்:

ராசா இளையோர் கால்பந்து கிளப்பின் ஏற்பாட்டில் பெனால்டி கிக் போட்டி சிறப்பாக  நடைபெற்றது.

இப் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ பரிசுகளை எடுத்து வழங்கினார்.

ராசாவில் நடைபெற்ற இப் போட்டியில் 28 அணிகள் கலந்துக் கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.

May be an image of 5 people, people smiling and text that says "่งไวล LIGAPENALILANJURAN LIGA PENALTI ANJURAN PEMUDA PEMUDARASAFC RASA c CLOSING DATE CLOSINGDATE04MAY2024 04 MAY 2024 LEAGUESYSTEM POKINGSTYLES PYLES M1000 000 M1 EAGHTEA คย LTEKE AEHO P NIKE"

இதில் ரவாங்கைச் சேர்ந்த என்எம்தி எப்சி அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அவ்வணியினருக்கு 1,000 ரிங்கிட்டும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது.

பத்தாங்காலியைச் சேர்ந்த பிகே பிரதர்ஸ் ஜூனியர் இரண்டாவது இடத்தை பிடித்தனர். அவ்வணியினருக்கு 750 ரிங்கிட் பரிசாக வழங்கப்பட்டது.

மூன்றாவது இடத்தை பிடித்த செரண்டா அணிக்கு 500 ரிங்கிட்டும் நான்காவது இடத்தை பிடித்த பெமூடா ராசா அணிக்கு 300 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்பட்டது.

இப் போட்டியின் நிறைவு விழாவில் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ கலந்துகொண்டார்.

May be an image of 9 people

அதே வேளையில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளை அவர் எடுத்து வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்வில் நகராண்மைக் கழக உறுப்பினர் திலகவதி, தேசிய உடற்கட்டழகர் வீரர் மைக் மகேன், ராசா இளையோர் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த காசி, நாதன், அம்பி, வைகி நாகேந்திரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

முன்னாதாக இப்போட்டியை ஆலயத் தலைவர் சண்முகம் தொடக்கி வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன

தொடர்புடைய செய்திகள்

+ - reset