நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி: ஜப்பான் வாகை சூடியது 

டோஹா: 

23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டியின் இறுதியாட்டத்தில் ஜப்பான் உஸ்பெகிஸ்தான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வாகை சூடியது 

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஃபூமி யமடா மூலம் ஜப்பான் அதன் வெற்றிக்கோலை பெற்றது. இந்த ஒரே கோல் ஆட்டத்தின் இறுதி வரை சென்றதால் ஆட்டம் ஜப்பான் அணிக்கு சாதகமானது. 

ஜப்பான் அணியின் வெற்றியை அனைத்து ரசிகர்களுக்குச் சமர்ப்பணம் செய்வதோடு இந்த போட்டிக்காக ஜப்பான் நாட்டிற்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கிய காற்பந்து நிர்வாக அதிகாரிகள், ஜப்பான் காற்பந்து சங்கம் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தமது நன்றி என்று ஜப்பான் அணியின் பயிற்றுநர் கோ ஒய்வா கூறினார். 

கடந்த 2022ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தை மட்டுமே பிடித்த ஜப்பான் அணி, இந்த முறை ஆசிய கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset