நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் உள்ளூர் வேட்பாளரான கைரூல் அஸ்ஹாரியை களமிறக்குகிறது தேசியக் கூட்டணி

பத்தாங்காலி:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் உள்ளூர் வேட்பாளரான கைரூல் அஸ்ஹாரி சவுத்தை தேசியக் கூட்டணி களமிறக்கியுள்ளது.

இதனை தேசியக் கூட்டணியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அறிவித்தார்.

கோல குபு பாரு இடைத் தேர்தலில் தேசியக் கூட்டணி வேட்பாளராக பெர்சத்து உலு சிலாங்கூர் தொகுதியின் இடைக்கால தலைவரான கைருல் அஸ்ஹாரி சவுத் போட்டியிடவுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தேசியக் கூட்டணியிம் உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வேட்பாளர் பற்றி இன்னும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இறுதியில் கோல குபு பாருவில்  போட்டியிட்ட சரியான வேட்பாளர் கைருல் அஸ்ஹரி என உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரை  நான் வேட்பாளராக அறிவிக்கிறேன்.

உங்களுக்கு உள்ளூர் வேட்பாளர் வேண்டும் என்றால்  கைருல் அஸ்ஹாரி தான் மிகச் சிறந்த உள்ளூர் வேட்பாளர் என்று டான்ஸ்ரீ மொஹைதின் பலத்த கரவொலிக்கு மத்தியில் அறிவித்தார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset