நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்

சுங்கைப்பாட்டாணி:

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு தொடர்ந்து பாதுக்காக்கப்பட வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். கிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.

சுங்கைப்பட்டாணி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜேந்திர சோழனின் சிலை பார்ப்பதற்காக நீதிபதி இங்கு வந்தார்.

அவருடன் இந்திய அரசின் மேல்முறையீட்டு தீர்ப்பாயக் குழுவின் தலைமை அதிகாரி டாக்டர் பி. ராமசாமியும் வந்திருந்தார்.

ராஜேந்திர சோழனின் சிலைக்கு மாலையிட்டு அவர்கள் மரியாதை செலுத்தினர்.

அதே வேளையில் அவர்கள் பூஜாங் பள்ளத்தாக்கிற்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு பல வரலாறுகள் அழிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தனர்.

குறிப்பாக மலேசியாவில் தமிழர்களின் வரலாறு தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நீதிபதி கிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ தனேந்திரன், அவரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ வேணி, உதவித் தலைவர் குகனேஸ்வரன், கெடா மாநில தலைவர் டத்தோ ஓஜி சண்முகம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset