நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு இந்தியர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; மஇகாவின் சுயநலத்திற்கு இதுவே காரணம்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாருவில் வாழும் இந்திய மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

மஇகாவின் சுயநலத்திற்கு இதுவே காரணம் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக பாங் சோக் தாவ் களமிறங்கியுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக மஇகா பிரச்சாரம் செய்து வருகிறது.

இங்கு ஏன் மஇகா பிரச்சாரம் செய்கிறது. மஇகாவுக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் தான் ஒத்து போகாதே என கேள்வி எழுப்புகின்றனர்.

உண்மை தான். ஆனால் தற்போது ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அனைவரும் ஒன்றுப்பட்டுள்ளோம்.

அதே வேளையில் இங்கு பிரச்சாரம் செய்வதற்கு மஇகாவுக்கு ஒரு சுயநலம் உண்டு. 

கோல குபு பாரு மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்த சுயநலமாகும்.

அதன் அடிப்படையின் தான் மஇகா ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை மஇகா ஆதரிக்கிறது.

ஆகவே மே 11ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் பாங் சோக் தாவ்க்கு இந்திய சமுதாயம் வாக்களித்து அவரின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்.

கோல  குபு பாருவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துக் கொண்ட டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன்,கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ், நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset