நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்

ஈப்போ:

இந்நாட்டில் அதிகமான முஸ்லிம்கள், பூமிபுத்ராக்கள் இருந்த போதிலும் பிற இனத்தவர்களின் உரிமைகள் காக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் இதனை திட்டவட்டமாக கூறினார்.

ஒவ்வொரு மலேசியர்களின் உரிமையை பாதுகாப்பதுடன், அவர்களின் நம்பிக்கை, மதத்தை மதிக்கவும் அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்.

மலேசியர்கள் ஒற்றுமையை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.  இதை நாம் பாதுகாக்க வேண்டும்.  லே

மலேசியாவை ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்க ஒற்றுமையின் அவசியதை தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கல்வியில்  ஆங்கிலத்தில் முழு திறனுடன் அறிவியல், கணித பாடங்களில கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

ஏழைகளுக்கு உதவும் விவகாரத்தில் மடானி அரசு எந்த இன பாகுபாட்டை  காட்டாது.  ஏழைகளுக்கு தேவையான உதவிகள் வழங்க தயாராக உள்ளது.

ஏழைகளுக்கு சாப்பிட போதுமான உணவு  அல்லது குழந்தைகள் சரியான கல்வியைப் பெற முறையான உதவிகள் வழங்கப்படும்.

இதில் ஒவ்வொரு நபரையும் பாதுகாக்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

பேரா, ஈப்போவில் உள்ள  இந்தரா முலியா அரங்கில் நடைபெற்ற வைசாக்கி திறந்த இல்ல உபசரிப்பில்  கலத்துக் கொண்டு பேசிய டத்தோஸ்ரீ அன்வார்  இவ்வாறு கூறினார்.

பேராக்கில் உள்ள சீக்கிய சமூகத்தின் நலனுக்காக 200,000 ரிங்கிட்  ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த நிகழ்வில் அறிவித்தார்.

இதில் பேசிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அ. சிவநேசன், 

இம்மாநிலத்தில சிறுபான்மைக் கொண்ட சமுகமாக இருக்கும் சீக்கிய சமுகம் நலன்களுக்கு உதவிகள் வழங்கம்பட்டு வருவதை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset