நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக விவகாரத்தில் அம்னோ, தேசிய முன்னணி ஊமையாக இருக்கக் கூடாது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்எஸ் தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.

டத்தோஶ்ரீ நஜீப்பிற்கு வழங்கப்பட்ட  தண்டனையை மாட்சிமை தங்கிய மாமன்னர் குறைத்தார்.

அதே வேளையில் அவருக்கு மாமன்னர் வீட்டுக் காவல் வழங்கியதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் நஜீப்பிற்கு வீட்டுக் காவல் வழங்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என நஜீப் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நஜீப்பிற்கு எதிராக வழக்கறிஞர் மன்றம் செயல்பட்டு வருகிறது.

வழக்கறிஞர் மன்றத்தின் இந்த நடவடிக்கை மலேசிய வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ ஹமித் சுல்தான் அபு பாக்கார் சாடியுள்ளார்.

இதன் வாயிலாக நஜீப்பிற்கு எதிரான சட்ட நடவடிக்கையில் அவருக்கு நீதி கிடைக்கவில்லை என தெரிய வருகிறது.

ஆகவே நஜீப்பிற்கு உரிய நீதி கிடைப்பதை அம்னோவும் தேசிய முன்னணியும் உறுதி செய்ய வேண்டும்.

அதற்கான அனைவரும் போராட வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset