நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஓஷன் இன்ஃபினிட்டி எம்எச்370 விமானத் தேடல் பணியைத் தொடங்கவுள்ளது: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ்-க்குச் சொந்தமான எம்எச் 370 விமானத்தின் புதிய தேடுதல் பணியை இந்த நவம்பரில் தொடங்கவுள்ளது. 

இது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

தென் இந்தியப் பெருங்கடலில் நிலவும் வானிலை காரணமாக தேடுதல் பணியை இப்போது தொடங்க முடியாது. நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலநிலை தேடுதலுக்கான மிகவும் பொருத்தமான காலநிலையாகும் என்று ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அமைச்சுக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான சந்திப்பின் போது, நிறுவனத்தின் சமீபத்திய முன்மொழிவைச் சமர்ப்பித்த போது இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மார்ச் மாதத்தில், தேடலை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை விவாதிக்க இந்தத் மாத தொடக்கத்தில் ஓஷன் இன்ஃபினிட்டியை சந்திப்பதாக லோக் கூறியிருந்தார்.

முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்ற எம்.எச் 370 விமானம் மாயமானது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset