நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்: பிரதமர்

கங்கார்:

வரும் டிசம்பர் மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள உயர்வை அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் வாயிலாக நடைமுறைப்படுத்த முடியும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதியளித்துள்ளார். 

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக அடுத்த ஆண்டு முதல்  10 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால கடுமையான நிதி நிர்வாகத்துடன் இடமளிக்கப்படலாம் என்று நிதி அமைச்சரான அவர்  கூறினார்.

நிதி நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த சம்பள உயர்வை அமல்படுத்தலாம்.

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவு நியாயமான வெகுமதி என்றும், 

அவர்களின் கடமைகள், ஒழுக்கம் பற்றிய புரிதலை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சி என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset