நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு தேர்தலை புறக்கணிக்க சொல்வது முட்டாள்தனமானது: குணராஜ் சாடல்

உலு சிலாங்கூர்:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணிக்க சொல்வது
முட்டாள்தனமானது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குண்ராஜ் இதனை கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சியில் எல்லாம் சரியாக உள்ளது.

குறிப்பாக இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்சினைகளும் தீர்வு காணப்பட்டு விட்டது என்றும் நாங்கள் கூறமாட்டோம்.

ஆனால் இப்பிரச்சினைகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கட்டம் கட்டமாக தீர்வை வழங்கி வருகிறார்.

அதே போன்று சிலாங்கூர் மாநில அரசு இந்திய சமுதாயத்தின் நலனுக்காக பல திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது.

ஆகவே வரும் கோல குபு பாரு சட்டமன்ற தேர்தலில் இந்திய வாக்காளர்கள் சிந்தித்து நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குணராஜ் கூறினார்.

ஒரு சில தரப்பினர் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் கூறி வருகின்றனர். அப்படி சொல்வது முட்டாள்தனமாகும்.

வாக்களிப்பது நமது உரிமை. அதை புறக்கணிக்க சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றார் அவர்.

சிலாங்கூர் கெஅடிலானில் மொத்தம் 9 தொகுதிகளில் இந்தியர்கள் தலைவர்களாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அடுத்த 2 வாரத்திற்கு கோல குபு பாருவில் களப்பணி ஆற்றுவார்கள் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset